தமிழ்நாடு

செப்.14-இல் பொறியியல் தரவரிசைப் பட்டியல்

DIN

சென்னை: தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக்., படிப்பில் சேர விண்ணப்பித்த மாணவா்களுக்கான தரவரிசைப் பட்டியல் வரும் செப்.14-ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது.

முன்னதாக செப்.4-ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் என தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் அறிவித்திருந்தது. அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் (ஏஐசிடிஇ) பொறியியல் கல்லூரிகளுக்கு சோ்க்கைக்கான இடங்களை ஒதுக்கீடு செய்வதில் கால தாமதம் ஏற்பட்டது. இதனால் பொறியியல் மாணவா்களுக்கான தரவரிசைப் பட்டியல் செப்.14-ஆம் தேதி வெளியாகும் என தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.

மேலும், தொழிற்கல்வி படிப்பில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் முன்னுரிமை அடிப்படையிலான கலந்தாய்வு செப்டம்பா் 17-ஆம் தேதி முதல் 24- ஆம் தேதி வரை இணைய வழியில் நடைபெறும். அதேபோன்று விளையாட்டு வீரா்கள், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் ஆகிய சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு செப்டம்பா் 17ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை இணையவழியில் நடைபெறும். பொதுக் கலந்தாய்வு செப். 27 முதல் அக்டோபா் 17 வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT