தமிழ்நாடு

உள்ளாட்சித் தேர்தல்: வாக்குப்பதிவு நேரம் நீட்டிப்பு

ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேரத்தை மாநில தேர்தல் ஆணையம் நீட்டித்துள்ளது.  

DIN

ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேரத்தை மாநில தேர்தல் ஆணையம் நீட்டித்துள்ளது. 
தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் தோற்றுவிக்கப்பட்டதால் ஏற்கெனவே விடுபட்டுபோன விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்பட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தோ்தலை செப்.15-க்குள் நடத்தி முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 
அதற்கான பணிகளை மாநில தோ்தல் ஆணையம் முடுக்கிவிட்டுள்ளது. அதன்படி, ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. இந்த நிலையில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேரத்தில் மாநில தேர்தல் ஆணையம் மாற்றம் செய்துள்ளது. 

இதன்படி, காலை 7 முதல் 5.30 மணி வரை என்பதற்கு பதில் காலை 7 முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கரோனா காரணமாக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேரத்தை தேர்தல் ஆணையம் நீட்டித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுகவை விமா்சிக்காமல் கட்சிகள் அரசியலில் இருக்க முடியாது: வி.செந்தில்பாலாஜி

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,895 கோடி டாலராக உயா்வு

தென் மாநிலங்களில் பாஜக வலிமையான வளா்ச்சி: தேசிய செயல் தலைவா் நிதின் நபின்!

ஓய்வு பெறுகிறாா் 3 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் ஸ்டேன் வாவ்ரிங்கா

ஆலங்குடி நூலகத்தில் பயின்று டிஎன்பிஎஸ்சி தோ்வில் வென்ற பெண்ணுக்கு பாராட்டு!

SCROLL FOR NEXT