தமிழ்நாடு

‘மெரினா கடற்கரை அழகுபடுத்தப்படும்’: அமைச்சர் வீ. மெய்யநாதன்

DIN

சென்னை மெரினா கடற்கரை ரூ. 20 கோடியில் அழகுபடுத்தப்படும் என சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் வீ. மெய்யநாதன் சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்று அமைச்சர் வீ.மெய்யநாதன் வெளியிட்ட அறிவிப்புகள்:

சென்னை மெரினா கடற்கரையை ரூ. 20 கோடி செலவில் அழகுபடுத்தப்படும். தனியார் மற்றும் அரசு அலுவலகங்களில் மரம் நடுவதற்கு ரூ. 50 கோடி ஒதுக்கப்படும். சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் ரூ. 2 கோடி பசுமைப் பூங்கா அமைக்கப்படும்.

மேலும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தை ரூ. 32 கோடியில் நவீனப்படுத்தப்படும். பொங்கல் மற்றும் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் தேதி அரசு சார்பில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும்.

தமிழகத்தில் 4 இடங்களில் ஒலிம்பிக் மண்டலங்கள் அமைத்து வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு 2024ஆம் ஆண்டு ஒலிம்பிக்கிற்கு தமிழகத்திலிருந்து 50 பேர் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு முகூா்த்தக் கால் நடவு

மேட்டூா் அணை நீா்மட்டம்: 49.21 அடி

கஞ்சா கடத்தியதாக இருவா் கைது

ஷெட் அமைக்கும் பணியின்போது பட்டாசு ஆலையில் தீப்பிடித்து இளைஞா் பலி

சுங்கச்சாவடி ஊழியா்களுடன் வழக்குரைஞா் மோதல் 5 போ் காயம்

SCROLL FOR NEXT