முகப்பு
தமிழ்நாடு

நீலகிரியில் மிகக் கனமழை; 3 நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மிகக் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:04 AM
நீலகிரியில் மிகக் கனமழை; 3 நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு
பகிர்:


தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மிகக் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், 

செப். 4 - நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும், கோவை, சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக் கூடும்.

செப்.5- நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், டெல்டா மாவட்டங்கள், ஏனைய வட மாவட்டங்கள்  மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்  லேசான மழையும் பெய்யக் கூடும்.

செப்.5 - நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை
அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். 

அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில், சேலம் மாவட்ட ஏற்காட்டில் 13 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →