வ.உ.சிதம்பரனாரின் 150 ஆவது பிறந்த நாளையொட்டி, அவரது திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.  
தமிழ்நாடு

வ.உ.சி உருவப்படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 150 ஆவது பிறந்த நாளையொட்டி, அவரது திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். 

DIN


கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 150 ஆவது பிறந்த நாளையொட்டி, அவரது திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். 

சென்னை இராஜாஜி சாலை, துறைமுகம் வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியின் போது, செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பிலான கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார் அவர்களது வாழ்க்கைக் குறிப்பு (தமிழ் மற்றும் ஆங்கிலம்) மடிப்பேடுகளை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு பெற்றுக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியின் போது, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன், இ.ஆ.ப., செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், இ.ஆ.ப., சென்னை மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெ.விஜயா ராணி, இ.ஆ.ப., சென்னை துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ.88.66 ஆக நிறைவு!

பிரதி மாதம் மாமன்றக் கூட்டத்தை நடத்த பாஜக வலியுறுத்தல்

கருங்குயில்... திவ்யா துரைசாமி!

மகளிர் உலகக் கோப்பை தோல்வி எதிரொலி! பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!

பிலிப்பின்ஸில் ‘கேல்மெகி புயல்’ கோரத்தாண்டவம்: 26 பேர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT