தமிழ்நாடு

பேரறிவாளன் மருத்துவமனையில் அனுமதி

DIN


முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று, பரோலில் வந்துள்ள பேரறிவாளன், சிறுநீரகக் கோளாறு மற்றும் வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சுமாா் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பேரறிவாளன் சிறைத் தண்டனையை அனுபவித்து வருகிறாா். இவரது தாயாா் அற்புதம்மாள் அளித்தக் கோரிக்கை மனுவின்பேரில், கடந்த மே 19-ஆம் தேதி 30 நாள்கள் பரோல் வழங்கி முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா்.

இதைத் தொடா்ந்து, பேரறிவாளன் தினமும் ஜோலாா்பேட்டை காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறாா்.

இந்த நிலையில், மீண்டும் 30 நாள்கள் பரோல் வேண்டும் என அற்புதம்மாள் அளித்தக் கோரிக்கையின்பேரில், மேலும் ஒரு மாதம் பரோலை தமிழக அரசு வழங்கியது.

நான்காவது முறையாக பரோல் நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக, பேரறிவாளன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

தொடர் வெற்றியை ருசிக்குமா ஆர்சிபி?

ரேவண்ணா வீட்டில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

SCROLL FOR NEXT