ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி 
தமிழ்நாடு

ஆளுநருடன் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினர் சந்திப்பு

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பஞ்சாப் மாநிலத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினர் இன்று அவரை நேரில் சந்தித்தனர். 

DIN

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பஞ்சாப் மாநிலத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினர் இன்று அவரை நேரில் சந்தித்தனர். 

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், பஞ்சாப் மாநில ஆளுநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் தமிழகத்துக்கு புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில், தமிழகத்தை விட்டு விடைபெறவிருக்கும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட ஆளும் கட்சியினர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். 

தொடர்ந்து, இன்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினர் ஆளுநரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். 

சென்னை கிண்டி ராஜ்பவனில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்வின்போது, முன்னாள் அமைச்சர்கள் பி.தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருடர்களைப் பாதுகாப்பதை நிறுத்திவிட்டு தரவுகளைக் கொடுங்கள்! தேர்தல் ஆணையருக்கு ராகுல் கெடு!

சாம்பியன்ஸ் லீக்கில் எகிப்திய அரசன் முகமது சாலாவின் புதிய சாதனை!

22 நாள்களுக்குப் பிறகு வைஷ்ணவி தேவி கோயில் யாத்திரை மீண்டும் தொடக்கம்!

சீனா மாஸ்டர்ஸ்: காலிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து!

தமிழ் இனத்துக்கும் சமூக நீதிக்கும் விரோதி திமுக! - Tamilisai Soundararajan

SCROLL FOR NEXT