தமிழ்நாடு

வாகனங்களுக்கு 5 ஆண்டு ’பம்பர் டூ பம்பர்’ காப்பீடு கட்டாயம் என்ற உத்தரவு வாபஸ்

DIN

’பம்பர் டூ பம்பர்’ அடிப்படையில் வாகனங்களுக்கு  5 ஆண்டுக்கான காப்பீடு கட்டாயம் என்ற உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் வாபஸ் பெற்றுள்ளது. 

சாலை விபத்து மரணம் தொடர்பான வழக்கு ஒன்றில், ’பம்பர் டூ பம்பர்’ அடிப்படையில் வாகனங்களுக்கு  5 ஆண்டுக்கான காப்பீடு கட்டாயம் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியிருந்தது. 

’பம்பர் டூ பம்பர்’ அடிப்படையில் வாகன உரிமையாளர், ஓட்டுநர்,  வாகனத்தில் பயணிக்கும் அனைவருக்கும் காப்பீடு செய்யப்படுகிறது. 

செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் விற்கப்படும் அனைத்து வாகனங்களுக்கும் ’பம்பர் டூ பம்பர்’ அடிப்படையில் 5 ஆண்டு காப்பீடு கட்டாயம் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியிருந்த நிலையில், தற்போதைய சூழ்நிலையில் அனைத்து வாகனங்களுக்கும் சாத்தியமில்லை என்று எதிர் தரப்பினர் கூறியதை அடுத்து, நீதிமன்றம் கூறிய உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது. 

பயணிகளின் பாதுகாப்பு கருதி உரிய சட்டதிருத்தங்கள் கொண்டு வரப்படும் என்று நம்புவதாக இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன் அமர்வு கூறியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே பந்துவீச்சு; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

சித்தார்த்தின் யசோதரை!

சக்கரை நிலவே... சம்யுக்தா மேனன்!

பிரதமர் மோடியாக நடிக்கிறேனா? - நடிகர் சத்யராஜ் விளக்கம்

மூளை வளர்ச்சி குன்றிய மகனின் கல்விக்காக போராடும் தாய்!

SCROLL FOR NEXT