பெரியகுளத்தில் அண்ணா பிறந்த நாள் விழா 
தமிழ்நாடு

பெரியகுளத்தில் அண்ணா பிறந்த நாள் விழா: ஒபிஎஸ் பங்கேற்பு

அண்ணாவின் 113-ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு பெரியகுளத்தில் உள்ள அண்ணா படம் மற்றும் சிலைக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

DIN

அண்ணாவின் 113-ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு பெரியகுளத்தில் உள்ள அண்ணா படம் மற்றும் சிலைக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தேனி மக்களவை உறுப்பினர் ப.ரவீந்திரநாத் அலுவலகத்தில் நடைபெற்ற அண்ணா பிறந்த நாள் விழாவில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்று அண்ணா படத்திற்கு பூக்கள் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் தேனி மக்களவை உறுப்பினர் ப.ரவீந்திரநாத் உடனிருந்தார்.

பின்னர் பெரியகுளம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் அதிமுக கட்சியினர் கலந்து கொண்டனர்.

ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி ப.விஜயலெட்சுமி மறைவிற்கு பின் அண்ணா பிறந்தநாள் விழாவில் ஓ.பன்னீர்செல்வம் முதன்முதலாக பங்கேற்றதால் அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

SCROLL FOR NEXT