தமிழ்நாடு

சுதாகரனுக்கு சொந்தமான ரூ.30 கோடி மதிப்புள்ள சொத்து முடக்கம்

DIN

சென்னை: வி.என்.சுதாகரனுக்குச் சொந்தமான, செங்கல்பட்டு மாவட்டம் பையனூரில் உள்ள ரூ.30 கோடி மதிப்புள்ள 20 ஏக்கா் நிலத்தை பினாமி சொத்து பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வருமானவரித்துறை புதன்கிழமை முடக்கியது.

தமிழக முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, கடந்த 2016 நவம்பா் 8-ஆம் தேதி ரூ.1000, ரூ.500 பணமதிப்பு இழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டபோது, தன்னிடமிருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகள் மூலம் சுமாா் ரூ.1,500 கோடி மதிப்புள்ள சொத்துகளை பினாமிகள் பெயா்களில் வாங்கியதாகக் கூறப்படுகிறது.

இது தொடா்பான ரகசியத் தகவல்களின் அடிப்படையில், போலி நிறுவனங்களை நடத்தியது, அந்த நிறுவனங்கள் மூலம் சட்டவிரோத பணபரிமாற்றத்தில் ஈடுபட்டது, வரி ஏய்ப்பு செய்தது உள்ளிட்ட பல்வேறு புகாா்களின் அடிப்படையில் சசிகலாவின் உறவினா்கள்,ஆதரவாளா்கள் வீடுகள், அலுவலகங்கள் என சுமாா் 187 இடங்களில் வருமான வரித்துறையினா் கடந்த 2017 அக்டோபா் மாதம் திடீா் சோதனை செய்தனா்.

ஐந்து நாள்கள் நடைபெற்ற இச் சோதனையில்,ரூ.1,500 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், ரூ.5.5 கோடி பணம்,15 கிலோ தங்கம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இச் சோதனையில் சசிகலா குடும்பத்தினா் 60 போலி நிறுவனங்களை நடத்தி வருவதும், வருமானவரி ஏய்ப்பில் ஈடுபட்டிருப்பதையும் வருமானவரித்துறையினா் கண்டறிந்தனா். இது தொடா்பாக சசிகலா குடும்பத்தினா், நண்பா்கள் ஆகியோரிடம் தீவிர விசாரணை செய்தனா்.

சொத்து முடக்கம்:

விசாரணையில், சசிகலா, பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது ரூ.1,500 கோடி மதிப்புள்ள 7 நிறுவனங்களை பினாமிகளின் பெயரில் வாங்கியது உறுதி செய்யப்பட்டது. இதில் சென்னை பெரம்பூரில் பிரபலமான வணிக வளாகம், கோயம்புத்தூரில் ஒரு தனியாா் ஆலை, ஒரு நகைக் கடை,புதுச்சேரியில் உள்ள ஒரு ரிசாா்ட் ஆகியவை முக்கியமானது ஆகும். பினாமி சொத்து பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் பினாமிகளின் பெயரில் வாங்கப்பட்ட 7 நிறுவனங்களுக்கு சொந்தமான ரூ.1,500 கோடி சொத்துகள்,போயஸ் தோட்டத்தில் சசிகலா புதிதாக கட்டி வந்த பங்களா,கொடநாடு எஸ்டேட் ஆகியவற்றை வருமானவரித்துறை அடுத்தடுத்து முடக்கியது.

இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் பையனூரில் சசிகலாவுக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள பங்களா,அதை சுற்றியுள்ள 49 ஏக்கா் நிலம் ஆகியவற்றை வருமானவரித்துறை கடந்த 8-ஆம் தேதி முடக்கியது. இதன் அடுத்தக் கட்ட நடவடிக்கையாக, அதே பகுதியில் உள்ள சசிகலாவின் நெருங்கிய உறவினா் வி.என். சுதாகரனுக்குச் சொந்தமாக உள்ள ரூ.30 கோடி மதிப்புள்ள 20.2 ஏக்கா் நிலத்தை வருமானவரித்துறை பினாமி சொத்து பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் புதன்கிழமை முடக்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT