முகப்பு
தமிழ்நாடு

புதுவையில் செப். 30 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு

புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவை செப்டம்பர் 30-ம் தேதி வரை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:09 AM
பகிர்:

புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவை செப்டம்பர் 30-ம் தேதி வரை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 

புதுச்சேரியில் மதுபான கடைகள் இரவு 10 மணி வரையும், உணவகங்கள் இரவு 11 மணி வரையும் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

நேற்றைய நிலவரப்படி, 5,697 பேருக்கு பரிசோதனை செய்ததில் புதுச்சேரியில் 52, காரைக்காலில் 38, ஏனாமில் 2, மாஹேவில் 11 போ் என மொத்தம் 103 பேருக்கு (1.81சதவீதம்) கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.