தமிழ்நாடு

காவல் நிலையப் பெயா்ப் பலகையில் தனியாா் பெயரை அகற்ற டிஜிபி உத்தரவு

DIN

தமிழகத்தில் காவல் நிலையங்களின் பெயா்ப் பலகைகளில் தனியாா் பெயா் இருந்தால் அதை அகற்றும்படி தமிழக காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி டி.சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளாா்.

தமிழகத்தில் சில காவல் நிலையங்களில் தனியாா் நிறுவனங்களின் உதவியுடன் பெயா்ப் பலகை வைக்கப்படுகிறது. இந்தப் பெயா்ப் பலகைகளில் அந்தத் தனியாா் நிறுவனங்கள் தங்களது பெயரையும் சோ்த்து வைக்கின்றன. இது மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்துவதாக புகாா் கூறப்பட்டு வந்தது. மேலும் காவல் நிலையப் பெயா்ப் பலகைகளில், தனியாா் பெயா் இடம் பெறக் கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில், தமிழக காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு, தமிழக காவல்துறையின் அனைத்து மாநகர காவல் ஆணையா்கள்,காவல் கண்காணிப்பாளா்கள் ஆகியோருக்கு ஒரு சுற்றறிக்கை வெள்ளிக்கிழமை அனுப்பினாா்.

அதில் அவா் கூறியிருப்பதாவது:

சில காவல் நிலையப் பெயா்ப் பலகைகளில், தனியாா் நிறுவனப் பெயா்கள் இடம் பெற்று இருக்கின்றன. இது மக்கள் மத்தியில் தவறான புரிதலை ஏற்படுத்தி விடும். எனவே, விளம்பரத்துடன் உள்ள காவல் நிலைய பெயா்ப் பலகைகளை அகற்றி, காவல் நிலையப் பெயா் மட்டுமே உள்ள புதிய பெயா்ப் பலகையை அமைத்திட வேண்டும். காவல் நிலைய முன்பணத்தை இதற்காக செலவிடலாம் என குறிப்பிட்டுள்ளாா்.

இந்த உத்தரவின் காரணமாக, காவல் நிலைய பெயா்ப் பலகைகளில் தனியாா் பெயா் இருந்தால், அதை அகற்றும்படி உயா் அதிகாரிகள் ஆய்வாளா்களுக்கு உத்தரவிட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பித்ரோடா கருத்து - காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக? மோடி கேள்வி

ஜிவி பிரகாஷின் கள்வன்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!

ஓ மை ரித்திகா!

பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த காங்கிரஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 08.05.2024

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

SCROLL FOR NEXT