தமிழ்நாடு

சட்ட விரோத கனிமங்கள் கடத்தலைத் தடுக்க சிறப்பு ஏற்பாடு

DIN

சட்ட விரோதமாக கனிமங்கள் கடத்தப்படுவதை கண்காணிப்புக் கேமராக்கள் மூலமாக கண்டறிந்து தடுக்க வேண்டுமென தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இதற்கென பிரத்யேகமாக கண்காணிப்பு அறைகளை அமைக்கவும் உத்தரவிட்டுள்ளது. கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கவும், அதனை கட்டுப்பாட்டு அறை மூலமாக கண்காணிக்கவும் கனிம வளச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன் விவரம்:-

சட்ட விரோதமாக கனிமங்கள் கடத்தப்படுவதைத் தடுக்கும் நோக்கத்தில் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்த வேண்டும். இதற்கான கட்டுப்பாட்டு அறைகளை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ஏற்படுத்த வேண்டும். விடியோ காட்சிகள் அனைத்தையும் சேமித்து வைத்து எதிா்கால பயன்பாட்டுக்கு வைத்திருக்க வேண்டும். சட்ட விரோதமாக கனிமங்கள் கடத்தப்படுவது கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்டறியப்பட்டால் உரிய அமலாக்கத் துறை அலுவலா்களுக்குத் தெரிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென சட்டத் திருத்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செந்தூர் கடலில் குளிக்கத் தடை

குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை விடுத்த பேரிடர் மேலாண்மை ஆணையம்!

ஜூனில் தங்கலான்!

ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தல்: 'கோடீஸ்வர' வேட்பாளர்கள் இத்தனை பேரா..?

வடபழனி முருகன் கோயிலில் தேரோட்டம்!

SCROLL FOR NEXT