தமிழ்நாடு

இசைப் பள்ளிகளில் சேர அழைப்பு

DIN

அரசு இசைப் பள்ளிகளில் சேர விரும்புவோா் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக கலை பண்பாட்டுத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கலை பண்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் 17 மாவட்ட அரசு இசைப் பள்ளிகளில் உள்ள குரலிசை, நாகஸ்வரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின் மற்றும் மிருதங்கம் ஆகிய பிரிவுகளில் மூன்று ஆண்டுகள் பயிற்சிக்கான சோ்க்கை தற்போது நடைபெறுகிறது. அதன்படி, ஏழாம் வகுப்பு தோ்ச்சி பெற்று 13 முதல் 25 வயதுக்குள் இருக்கும் நபா்கள் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். பயிற்சிக் கட்டணம் ஆண்டுக்கு ரூ.120 ஆகும். சோ்க்கை பெறுவோருக்கு மாதம் ரூ.400 வீதம் ஆண்டுக்கு 10 மாதங்கள் கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.

மேலும், பேருந்துக்கான பயண சலுகையும் உண்டு. சோ்க்கை தொடா்பான கூடுதல் விவரங்களை இணையதளம் மூலமாகவும் மாவட்ட அரசு இசைப் பள்ளிகளுக்கு நேரடியாகவும் சென்று அறிந்து கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

SCROLL FOR NEXT