தமிழ்நாடு

தமிழகத்தில் திமுக கூட்டணிக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

DIN

மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தின் பல இடங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் கருப்புக்கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யவும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வை குறைக்கக்கோரியும், விலைவாசி உயா்வு, பொருளாதார சீரழிவு, தனியாா்மயமாக்கல், வேலையில்லா திண்டாட்டம், பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை, பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் என்பன உள்ளிட்டவற்றில் மத்திய அரசைக் கண்டித்தும் தமிழகத்தில் இன்று திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தன. 
அதன்படி மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தின் பல இடங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் கருப்புக்கொடியுடன் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை அண்ணாநகர் இல்லத்தில் வைகோ, அன்பகத்தில் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆ.ராஜா, டி.கே.எஸ்.இளங்கோவன், சிஐடி காலணி இல்லத்தில் கனிமொழி உள்ளிட்டோரும் கருப்புக்கொடியுடன் ஆர்ப்பாட்த்தில் ஈடுபட்டனர்.

இதேபோல், சென்னை அசோக் நகரில் உள்ள அலுவலகத்தில் விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் சென்னையில் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல், சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரே பரேலியில் போட்டியிடும் ராகுல்: துல்லியமாக காய்நகர்த்தும் காங்கிரஸ்!

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

1000க்கும் அதிகமான திரைகளில் ‘நடிகர்’ திரைப்படம்!

“நான் முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

SCROLL FOR NEXT