பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுனுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மீரா மிதுனின் நண்பர் ஷாம் அபிஷேக்கிற்கும் நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது.
பட்டியலினத்தவா் குறித்து அவதூறாக பேசி விடியோ பதிவிட்ட விவகாரத்தில் நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பா் சாம் அபிஷேக் ஆகியோா் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த மாதம் 23-ஆம் தேதி ஜாமின் கோரி தாக்கல் செய்த மனு ஏற்கெனவே தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரி மீண்டும் சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் அவர்கள் இருவரும் மனு தாக்கல் செய்தனா்.
இதனை விசாரரித்த நீதிமன்றம் நடிகை மீரா மிதுனுக்கும், அவரது நண்பர் சாம் அபிஷேக்கிற்கும் நிபந்தனையுடன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.