தமிழ்நாடு

வேதாரண்யம் அரசு கல்லூரி கெளரவ விரிவுரையாளர்கள் உள்ளிருப்புப் போராட்டம்

DIN

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் அரசு கலை அறிவியல் கல்லூரியின் கெளரவ விரிவுரையாளர்கள், பணியாளர்கள் ஊதியம் வழங்கக் கோரி இன்று (செப்.22) உள்ளிருப்புப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இந்த போராட்டத்தை 3 நாள்களுக்கு தொடர்ந்து நடத்த திட்டமிட்டுள்ளனர்

தமிழகத்தில் செயல்படும் 10 பல்கலைக்கழகங்களின் கீழ் செயல்பட்ட 41 உறுப்பு கல்லூரிகள், மாதிரிக் கல்லூரிகள் அரசுக் கல்லூரிகளாக மாற்றப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் முதல் கட்டமாக 14 உறுப்புக் கல்லூரிகள் 2019 -ல் இருந்தும், இரண்டாவது கட்டமாக 27 கல்லூரிகள் 2020 டிசம்பர் முதல் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியாக செயல்பாட்டுக்கு வந்தன.

குறிப்பாக பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் கீழ் திருத்துறைப்பூண்டி, நாகப்பட்டினம், வேதாரண்யம், பெரம்பலூர் என 10 கல்லூரிகளும் அரசுக் கல்லூரிகளாக செயலாக்கத்துக்கு கொண்டு வரப்பட்டு விட்டது.

ஆனால், அரசுக் கல்லூரியாக மாற்றப்பட்ட பிறகு முந்தய நிர்வாகத்தின் பேரில் இருந்து வந்த பராமரிப்பு உள்ளிட்ட பல நடைமுறைகள் கவனம் குறைந்து வருகிறது. குறிப்பாக இந்த கல்லூரிகளில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்கள், அலுவலகப் பணியாளர்களுக்கு கடந்த 4 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. 

இதேபோல,வேதாரண்யத்தில் பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் கீழ் நிர்வகிக்கப்பட்ட பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரிக் கல்லூரி, கடந்த ஆண்டு முதல் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியாக மாற்றப்பட்டு செயல்படுகிறது.

நிர்வாக மாற்றத்துக்குப் பின்னர் பராமரிப்பு உள்ளிட்ட செலவின தேவைகளுக்கான தொகை வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. இந்த கல்லூரியில் பணியாற்றும் கெளரவ விரிவுரையாளர்கள், பணியாளர்களுக்கு கடந்த 4 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை.

இந்த நிலையில், வேதாரண்யம் அரசுக் கல்லூரியில் கெளரவ விரிவுரையாளர்கள், பணியாளர்கள் ஊதியம் வழங்கக்கோரி தற்போது உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT