மீண்டும் ‘தி ரைசிங் சன்’: செப். 26 முதல் வெளியாகிறது திமுகவின் இருவார இதழ்
திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகார்வப்பூர்வ ஆங்கில வார இதழான ‘தி ரைசிங் சன்’ மீண்டும் வெளியிடப்படவுள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகார்வப்பூர்வ ஆங்கில இருவார இதழான ‘தி ரைசிங் சன்’ மீண்டும் வெளியிடப்படவுள்ளது.
திமுகவின் செய்திகளை பிற மாநிலத்தவர்களுக்கு கொண்டு செல்லும் நோக்கில் 1971ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இருவார இதழான ‘தி ரைசிங் சன்’ பல்வேறு காரணங்களால் 2 முறை நிறுத்தப்பட்டது.
இதையும் படிக்க | விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு வழங்கும் திட்டம்: முதல்வர் தொடக்கி வைப்பு
Advertisement
Advertisement
இந்நிலையில், தற்போது தமிழகத்தில் மீண்டும் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள திமுக, மீண்டும் தனது கட்சியின் ஆங்கில இதழை வெளியிடவுள்ளது.
இதற்கான துவக்க விழா வரும் செப்டம்பர் 26ஆம் தேதி மாலை 4 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் பங்கேற்கும் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், ‘தி ரைசிங் சன்’ இதழை மீண்டும் வெளியிடுகிறார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.