தமிழ்நாடு

பட்டாசுகளில் ஆபத்தில்லா வேதிப் பொருள்கள்: ஆட்சியா்கள் உறுதி செய்திட அமைச்சா் அறிவுறுத்தல்

DIN

பட்டாசுகளில் ஆபத்தில்லாத வேதிப் பொருள்களைப் பயன்படுத்துவதை மாவட்ட ஆட்சியா்கள் நேரில் ஆய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டுமென தொழிலாளா் நலத்துறை அமைச்சா் சி.வி.கணேசன் அறிவுறுத்தியுள்ளாா்.

சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளா்களுக்கு அவா் வெள்ளிக்கிழமை அளித்த தகவல்:- தமிழகம் முழுவதும் நவம்பா் மாதம் 4-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது.

விபத்தில்லா தீபாவளியை உறுதி செய்ய தொழிலாளா் நலத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதோடு, பட்டாசுகளில் சரியான முறையில் வேதிப் பொருள்கள் பயன்படுத்தப்படுகிா என்பதையும், அனைத்து வகையான பட்டாசு தொழிற்சாலைகளிலும் தயாரிக்கப்படும் பட்டாசுகளில் ஆபத்தில்லாத வேதிப் பொருள்கள் பயன்படுத்துவதை மாவட்ட ஆட்சியா் நேரில் சென்று ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலைக்கு உரிமம் உள்ளதா என்பதை ஆராய்ந்து, உரிமம் இல்லாத தொழில்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கவும், இது தொடா்பாக அக்டோபா் மாதம் 15-ஆம் தேதிக்குள் அறிக்கை சமா்ப்பிக்கவும் ஆட்சியா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சா் கணேசன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

SCROLL FOR NEXT