முகப்பு
தமிழ்நாடு

சுதந்திர தினம்: சென்னையில் பாதுகாப்புப் பணியில் 3 ஆயிரம் காவலர்கள்

சுதந்திர தினத்தையொட்டி சென்னையில் பாதுகாப்புப் பணியில் 3,000 காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

சுதந்திர தினத்தையொட்டி சென்னையில் பாதுகாப்புப் பணியில் 3,000 காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து சென்னை காவல்துறை தரப்பில் வெளியிட்ட செய்திக்குறிப்பில், வருகிற 15.8.2021 அன்று 75வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு, முதல்வர் ஸ்டாலின் சென்னை, கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி சுதந்திரதின விழா பேருரையாற்றுகிறார். இதனையொட்டி சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவாலின் உத்தரவின் பேரில், கூடுதல் ஆணையாளர்கள் டி.செந்தில்குமார், இ.கா.ப (வடக்கு), மருத்துவர் என்.கண்ணன், இ.கா.ப, (தெற்கு), பிரதீப்குமார், இ.கா.ப (போக்குவரத்து) ஆகியோரின் அறிவுரையின்பேரில், காவல் இணை ஆணையாளர்களின் நேரடி மேற்பார்வையில், துணை ஆணையாளர்கள், உதவி ஆணையாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் என மொத்தம் 3,000 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் மூலம் சிறப்பு பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும், சென்னை பெருநகர காவல் சரக எல்லைக்குட்பட்ட சென்னை விமானநிலையம், இரயில் நிலையங்கள், பேருந்து முனையங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், கடற்கரை பகுதிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் கூடுதலாக போலீசார் நியமிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இது தவிர சென்னையிலுள்ள அனைத்து தங்கும் விடுதிகள் மற்றும் ஓட்டல்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, சந்தேக நபர்களின் நடமாட்டம் குறித்து ஏதேனும் தகவல் இருந்தால் காவல்துறைக்கு தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இது தவிர சென்னை பெருநகர் முழுவதும் அந்தந்த காவல் சரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சுற்றுக்காவல் ரோந்து வாகனங்கள் மூலம் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு, நகரின் முக்கியமான இடங்களில் தடுப்புகள் அமைத்து காவல் துறையினர் மூலம் வாகனத் தணிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments