FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஒலிம்பிக் போட்டிக்கு மதுரையைச் சேர்ந்த வீராங்கனை தேர்வு

ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு 400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டப் போட்டிக்கு மதுரையைச் சேர்ந்த வீராங்கனை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

28 ஜனவரி 2024, 9:04 am IST
பகிர்:

மதுரை: ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு 400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டப் போட்டிக்கு மதுரையைச் சேர்ந்த வீராங்கனை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மதுரை சக்கி மங்கலத்தைச் சேர்ந்தவர் ரேவதி 28. சிறுவயதிலேயே தாய், தந்தையை இழந்த ரேவதி மற்றும் அவரது தங்கை, பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்துள்ளனர். மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ள ரேவதி, மதுரையைச் சேர்ந்த தடகளப் பயிற்சியாளர் கண்ணன் அளித்த ஆதரவு மற்றும் தீவிரப் பயிற்சியின் விளைவால் தேசிய, சர்வதேசப் போட்டிகளில் பதக்கங்கள் பெற்றுள்ளார். 

இந்நிலையில் ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் 400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டப் போட்டிக்கு ரேவதி தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போது பட்டியாலா நகரில் நடைபெற்று வரும் பயிற்சி முகாமில் ரேவதி தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். குடும்ப வறுமையின் காரணமாக ரேவதி மைதானத்தில் வெறும் காலோடு ஓடி பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ரேவதி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று இருப்பதால் சக்கிமங்கலம் பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments