'ஒரு ரூபாய் தானே என்று எண்ண வேண்டாம்' : எச்சரிக்கும் காவல்துறை
செல்லிடப்பேசி செயலிகள் மூலம் மிகக் குறைந்த பணத்தை செலுத்துமாறு வரும் தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
செல்லிடப்பேசி செயலிகள் மூலம் மிகக் குறைந்த பணத்தை செலுத்துமாறு வரும் தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து சென்னை காவல்துறை விடுத்திருக்கும் எச்சரிக்கை செய்தியில், "ஏதேனும் வசதிகளை பெற அல்லது பதிவு செய்ய வேல்லெட் ஆப் மூலம் ரூ.1, ரூ.10 செலுத்துமாறு ஏதேனும் இணைய முகவரி குறுந்தகவலாகவோ, மின்னஞ்சலாகவோ அனுப்பப்பட்டால் கவனம்.
இதையும் படிக்கலாமே.. ஜிகா வைரஸ் எப்படி பரவுகிறது? ஏன் அச்சப்பட வேண்டும்?
Advertisement
Advertisement
சிறு தொகை என நினைத்து போலியான முகப்பில் செலுத்துவதன் மூலம் வங்கிக் கணக்கில் உள்ள மொத்த பணத்தையும் நீங்கள் இழக்க நேரிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, மக்களே, ஒரு ரூபாய் தானே என்று எண்ணாமல், சமூக வலைத்தளங்களில் முன்பின் தெரியாத யாருக்கும் பணப்பரிமாற்றம் செய்து, தேவையில்லாமல் மோசடியாளர்களிடம் சிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.