ஈரோடு பெரியார் மன்றத்தில் நேற்று நடைபெற்ற தா.பாண்டியன் நினைவு மலர் புத்தக வெளியீட்டு விழாவில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார். 
தமிழ்நாடு

மதவாத சக்திகளை தடுக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வலியுறுத்தல்

இந்தியாவில் மதவாத சக்திகளை தடுத்து நிறுத்துவதற்கு மதசார்பின்மையை ஏற்கும் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வலியுறுத்தினார்.

DIN

ஈரோடு: இந்தியாவில் மதவாத சக்திகளை தடுத்து நிறுத்துவதற்கு மதசார்பின்மையை ஏற்கும் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வலியுறுத்தினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் நினைவு மலர் புத்தக வெளியீட்டு விழா ஈரோடு பெரியார் மன்றத்தில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் மற்றும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ். இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டனர்.

இதனையடுத்து விழாவில் பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன், இந்தியாவில் மதவாத சக்திகளை தடுத்து நிறுத்துவதற்கு மதசார்பின்மையை ஏற்கும் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். மதவெறி தாக்கங்கங்கள் நாட்டில் அதிகரித்தால் மக்களிடையே பிளவு ஏற்பட்டு நிம்மதி போய்விடும் என்றார். 

இந்தியாவில் மதசார்பின்மையை ஏற்று கொண்ட தலைவர்களை தெரிந்து கொள்ளும் அதேநேரத்தில் மோடி போன்ற தலைவர்களும் இருப்பதை வேறுபடுத்தி குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். 

இவ்விழாவில் ஈரோடு, கிழக்கு சட்டப்பேரவை உறுப்பினர் திருமகன் ஈவெரா, மாநகராட்சி மேயர் நாகரத்தினம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கே.ஆர்.திருநாவுக்கரசு, தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் சி.மகேந்திரன், மாநிலக்குழு உறுப்பினர் ஸ்டாலின்குணசேகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ரகுராமன், திமுக நகரச் செயலாளர் சுப்பிரமணியம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பவானியில் 300 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

மானாமதுரை நகா் காங்கிரஸ் தலைவா் நியமனம்

பண்ணாரி அம்மன் கோயிலில் குவிந்த பக்தா்கள்

அறச்சலூா் ஓடாநிலையில் தீரன் சின்னமலை ஆடிப்பெருக்கு விழா

ஆடிப்பெருக்கு: பவானிசாகா் அணைப் பூங்காவில் குழந்தைகள், பெண்கள் கொண்டாட்டம்

SCROLL FOR NEXT