ராசிபுரம் பகுதியில் காவலர் குடியிருப்பு பகுதிகளை தூய்மைப்படுத்தும் பணியில் காவல்துறையினர். 
தமிழ்நாடு

ராசிபுரம்: காவலர் குடியிருப்பு பகுதிகளை தூய்மைப்படுத்தும் பணியில் காவல்துறையினர்

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காவல்துறையினரே தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

DIN

ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காவல்துறையினரே தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்டம் முழுதும் காவலர் குடியிருப்பு பகுதிகளை தூய்மைப்படுத்த வேண்டும் என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி உத்தரவிட்டிருந்தார். 

இதன்படி, ராசிபுரம் காவலர்கள் குடியிருப்பு பகுதியில் சுற்றுப்புறங்களில் உள்ள குப்பைகளை அகற்றி தூய்மைப்படுத்தும் பணியில் காவல்துறையினரே ஈடுபட்டனர். 

நாமக்கல் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சேகர் மேற்பார்வையில் காவல்துறையினர் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். காவலர் குடியிருப்பு பகுதியில் உள்ள குப்பைகள் அப்புறப்படுத்துதல், கழிவுநீர் அடைப்புகளை சீரமைத்தல் மரக்கன்றுகள் நட்டு வைத்தல், ஏற்கனவே உள்ள மரங்களுக்கு தண்ணீர் ஊற்றி பராமரித்தல் போன்ற தூய்மைப் பணிகளில் காவல்துறையினர் ஈடுபட்டனர். 

இப்பணியில் ராசிபுரம் டிஎஸ்பி, டி.கே .கே. செந்தில் குமார் ராசிபுரம் காவல் ஆய்வாளர் சுகவனம் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு! வெள்ள அபாய எச்சரிக்கை!

மேட்டூர் அணை நீர் வெளியேற்றம் 35,000 கனஅடியாக அதிகரிப்பு!

ப்ரண்ட்ஸ் மறுவெளியீட்டுத் தேதி!

சிட்டி யூனியன் வங்கியின் 11 புதிய டிஜிட்டல் தயாரிப்புகள்!

ரிமோட் ஸ்கிரீன் மிரரிங் பயன்படுத்துபவர்களா? கவனம்!

SCROLL FOR NEXT