சு.வெங்கடேசன் எம்.பி. 
தமிழ்நாடு

மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டண சலுகை நிராகரிப்பு: சு.வெங்கடேசன் எம்.பி. எதிர்ப்பு

மூத்த குடிமகன்களுக்கான ரயில் கட்டண சலுகை நிராகரிக்கப்பட்டதற்கு சு.வெங்கடேசன் எம்.பி. எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

DIN

மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டண சலுகை நிராகரிக்கப்பட்டதற்கு சு.வெங்கடேசன் எம்.பி. எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டண சலுகை மீள்வது குறித்து நான் 20.10.2021 எழுதிய கடிதத்திற்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்னவ் 21.03.2022 அன்று பதில் அளித்துள்ளார். 2020-21ல் ரயில்வே பயணக் கட்டணம், 2019-20ஐ ஒப்பிடுகையில் மூன்றில் ஒரு பங்குதான் இருந்தது என்று கூறி, எல்லா பிரிவினருக்கும் சலுகை கட்டணம் வழங்குவது சாத்தியமல்ல என்று தெரிவித்துள்ளார்.
கரோனா காலத்தில் நிறைய நாள்கள் ரயில் ஓடவில்லை. ஆகவே வருவாய் குறைந்தது எல்லோரும் அறிந்ததே. அதுபோல பல குடும்பங்களும் வருவாயை, வேலைகளை இழந்தன. கரோனா கால நிவாரணமாக மாதம் ரூ.7,500 தாருங்கள் என்ற கோரிக்கையையும் அரசு ஏற்கவில்லை. மூத்த குடிமக்களின் உளவியல் பாடுகள் சொல்லி மாளாது. தாங்கள் சுமையாக கருதப்படக் கூடாது என்ற அவர்களின் உணர்வுகள் மிக முக்கியமானது. 

அரசிற்கு இதயம் வேண்டும். இதுபோன்ற கட்டன சலுகைகள் அவர்களுக்கு சமூகம் ஆற்றுகிற நன்றிக் கடன் மட்டுமல்ல அவர்களின் உரிமையும் கூட. இன்னும் அவர்கள் தாங்கள் நுகரக் கூடிய ஒவ்வொரு பண்டம், சேவை மீதும் வரி செலுத்துகிறார்கள். வருமான வரி செலுத்துபவர்களும் உண்டு. கடந்த 6 மாதங்களாக முன்பைப் போல ரயில்கள் ஓட ஆரம்பித்தும் விட்டன.
அவர்கள் கை விரலைப் பிடித்து இந்த தேசம் நடந்திருக்கிறது.
அமைச்சரே உங்கள் பதில் குரூரமானது. மறு பரிசீலனை செய்யுங்கள். மீண்டும் கட்டண சலுகையை கொண்டு வாருங்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பனித்துளி... பிரியங்கா மோகன்!

செவ்வானம்... திவ்ய பாரதி!

மேகம்... ரித்திகா நாயக்!

திஷா பதானியின் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு! குற்றவாளிகள் சுட்டுக்கொலை!

அமெரிக்க வரி விதிப்பால் ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தி 8% பாதிப்பு!

SCROLL FOR NEXT