தம்மம்பட்டிக்கு விற்பனைக்கு வரும் கொல்லிமலை புளி
கொல்லிமலையில் விளையும் சுவை மிகுந்த புளி, தம்மம்பட்டியில் விற்பனைக்காகக் கூடைகளில் கொண்டு வரப்படுகிறது.
கொல்லிமலையில் விளையும் சுவை மிகுந்த புளி, தம்மம்பட்டியில் விற்பனைக்காகக் கூடைகளில் கொண்டு வரப்படுகிறது.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில், குண்டனி, எண்ணாம்பாலி, தேனூர், நரியன்காடு, செங்கரை, வேலிக்காடு,கீரைக்காடு, அரவங்காடு, ஆலத்தூர், புதுவளவு, மங்களம், பெல்லக்காடு, குளத்துகாடு, நடுக்கோம்பை, அடுக்கம் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. மலைப்பகுதிகளில் விளையும் புளியானது மிகவும் சுவையாக இருக்கும் என்பதால், இங்கு விளையும் புளிக்கு மக்களிடையே வரவேற்பு உள்ளது.
இதனால், கொல்லிமலைப் பகுதி மக்கள், மலையடிவாரப்பகுதிகளில் உள்ள புளியஞ்சோலை, சேந்தமங்கலம், காரவள்ளி, முள்ளுக்குறிச்சி மற்றும் தம்மம்பட்டிக்கு விற்பனைக்கு கொண்டு செல்வார்கள்.
Advertisement
Advertisement
தற்போது, கொல்லிமலையில் புளி சீசன் துவங்கியுள்ளது. அதையடுத்து, தம்மம்பட்டியில் இன்று வாரச்சந்தையில் புளி விற்பனை செய்வதற்காக, மலைவாழ் மக்கள் கூடை கூடையாகப் புளியைக் கொண்டு வந்துள்ளனர். கடந்த ஆண்டு சீசனில் விற்ற விலையை விட, இந்த ஆண்டு புளி விலை குறைந்தே விற்பனையாகிறது.
இதுகுறித்து, கொல்லிமலையைச் சேர்ந்த சேகர் கூறியதாவது, ' கடந்த ஆண்டு 100 ரூபாய் வரை, ஒரு கிலோ விற்பனையானது. இந்த ஆண்டு வெளியூர் வியாபாரிகள் யாரும் புளி வாங்க வராததால், இப்போது, 60 ரூபாய்க்குத்தான் விற்கிறோம், என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.