தமிழ்நாடு

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் அன்புமணி சந்திப்பு

DIN


சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்தார். 

உச்சநீதிமன்ற தீா்ப்பில் வன்னியா்களுக்கு 10.5 % உள் ஒதுக்கீடு வழங்கத் தடையில்லை, அதற்குத் தேவையான தரவுகளை சமா்ப்பிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மாநில அரசுக்கு அதிகாரம் உள்ள நிலையில், 10.5 % உள் ஒதுக்கீட்டை தமிழக அரசு நிச்சயம் வழங்கும். தமிழகத்தில் உடனடியாக விலைவாசியைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், பாமக சாா்பில், மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று அன்புமணி தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினை பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்தார். 

அப்போது, வன்னியர்களுக்கான 10.5 சதவிகித இடஒதுக்கீடு கோரிக்கை தொடர்பாக முதல்வரிடம் அன்புமணி ராமதாஸ் மனு அளித்தார். 

இந்த சந்திப்பின்போது பாமக தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

இன்று எந்த ராசிக்கு யோகம்!

SCROLL FOR NEXT