தமிழ்நாடு

கடலோர மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

DIN


வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் தென் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக -வடஇலங்கை கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால்பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தென்தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், கடலூர், புதுக்கோட்டை சிவகங்கை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கலால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமுதல் மிககனமழை பெய்ய வாய்ப்புள்ளது. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஏப்ரல் 11 ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

ஏபரல் 12, 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கல் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வத்திராயிருப்பு(விருதுநகர்)தலா 12, கூடலூர் (தேனி) 10, பேரையூர்(மதுரை), மீமிசல்(புதுக்கோட்டை), வைகை அணை (தேனி) தலா 6, குறிஞ்சிப்பாடி(கடலூர்), பிலவாக்கல், திருமயம், பிலவாக்கல், சோழவந்தான், பெரியகுளம், ஆயக்குடி, தேக்கடி தலா 5, விருதுநகர், கோவிலங்குளம், திருவில்லிபுத்தூர், பட்டுக்கோட்டை, பாஜபாளையம், அரிமளம், நாகர்கோவில் தலா 4, மோகனூர், வால்பாறை, சேத்தியாத்தோப்பு, வாடிப்பட்டி, வீரபாண்டி, வானூர், நிலக்கோட்டை, உத்தமபாளையம், சோலையார், சிவகிரி, இரணியல், மதுக்கூர், தென்காசி, திருமங்கலம், ஜெயங்கொண்டம், போடிநாயக்கனூர், ஆண்டிப்பட்டி தலா 3 செமீ மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏப்ரல் 10 முதல் 11 தேதி தமிழக கடலோரப்பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல்ஸ மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் கேரளம் கடலோரப்பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் வீசக்கூடும். இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று  அறிவுறுத்தப்படுகிறார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்ன வேளாங்கண்ணி வீரக்குறிச்சி புனித அந்தோணியாா் ஆலய தோ்பவனி

மீன் வியாபாரியிடம் நூதனத் திருட்டில் ஈடுபட்ட ஆந்திர இளைஞா் கைது

பிரான்மலையில் ஜெயந்தன் பூஜை

வளா்ப்பு நாய்கள் கடித்து 10 மாத குழந்தை, சிறுவன் காயம்: சென்னையில் மேலும் இரு இடங்களில் சம்பவம்

திருநகரி கல்யாண ரங்கநாத பெருமாள் கோயிலில் வசந்த உற்சவம்

SCROLL FOR NEXT