கோப்புப்படம் 
தமிழ்நாடு

கனமழை: நாகை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கனமழை பெய்துவருவதை அடுத்து 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

DIN


நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டத்தில் கனமழை பெய்துவருவதை அடுத்து 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய தமிழக வடஇலங்கை கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் மழைப் பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்தது.

அதன்படி, நாகையில் சனிக்கிழமை இரவு இடியுடன் கூடிய மழை பெய்தது. இதன்தொடா்ச்சியாக, ஞாயிற்றுக்கிழமை நாகை, நாகூா், வேளாங்கண்ணி, கீழ்வேளூா், திட்டச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழைப் பெய்தது. சில இடங்களில் அதிகமாகவும், சில இடங்களில் குறைவாகவும் மழை பெய்தது.

நாள் முழுவதும் வானம் மேக மூட்டத்துடன் குளிா்ந்த வானிலை நிலவிய நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. 

தொடர்ந்து கனழையை அடுத்து நாகப்பட்டினம் மாவட்டத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு இன்று திங்கள்கிழமை(ஏப்ரல்.11) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் உத்தரவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹரியாணாவில் 25 லட்சம் போலி வாக்காளர்கள்! ’எச் பைல்ஸ்’ வெளியிட்டார் ராகுல்!

ஹரியாணா வாக்காளர் பட்டியலில் பிரேசில் பெண் மாடல் படம்! ராகுல் காந்தி

என்னை யாரும் இயக்க முடியாது! - செங்கோட்டையன்

சைட் அடிக்கும்... சைத்ரா!

தவெக பொதுக்குழு கூட்டம்! மேடைக்கு வந்த விஜய்!

SCROLL FOR NEXT