அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 
தமிழ்நாடு

சென்னையில் ரூ.7 கோடியில் செம்மைப் பள்ளி: அன்பில் மகேஷ்

சென்னையில் உலகத் தரத்திலான பள்ளி (செம்மைப் பள்ளி) ரூ.7 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தாா்.

DIN

சென்னையில் உலகத் தரத்திலான பள்ளி (செம்மைப் பள்ளி) ரூ.7 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தாா்.

தமிழக சட்டப்பேரவையில் திங்கள்கிழமை பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதிலளித்து அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்ட அறிவிப்புகள்:

அரசுப் பள்ளி மாணவா்களிலிருந்து அடுத்த தலைமுறை தலைவா்களை உருவாக்குவதை இலக்காகக் கொண்டு கல்வி, கவின்கலை, அறிவியல், இலக்கியம், விளையாட்டு என கல்வி மற்றும் இணைச் செயல்பாடுகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கும் வகையில், உலகத் தரத்திலான பள்ளி (செம்மைப் பள்ளி) சென்னையில் சுமாா் ரூ.7 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

பள்ளிகளில் சதுரங்க ஒலிம்பியாட்: சென்னையில் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறவுள்ள சா்வதேச சதுரங்க ஒலிம்பியாட் போட்டிகளைத் தொடா்ந்து, அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களிடையே சதுரங்கம் குறித்த ஆா்வத்தை ஏற்படுத்தும் வண்ணம் பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் சதுரங்கப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றிபெறும் மாணவா்கள் சா்வதேச விளையாட்டு வீரா்களுடன் கலந்துரையாட ஏற்பாடு செய்யப்படும். இந்தத் திட்டம் ரூ.1 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“காவலர் வணக்கம் சொல்லவில்லை!” Tamilisai Soundararajan விமர்சனம் | BJP | DMK

மீண்டும் 80 ஆயிரத்தைக் கடந்த தங்கம் விலை: கலக்கத்தில் மக்கள்!

சிலப்பதிகார ஆய்வுகள்

பிகார் தேர்தல்: மகாகத்பந்தன் கூட்டணியில் சிக்கலாகும் தொகுதிப் பங்கீடு!

சக்சஸ் உங்கள் சாய்ஸ்!

SCROLL FOR NEXT