தமிழ்நாடு

'ஊரக வளர்ச்சிக்குத் தேவையான 9 முக்கிய கருப்பொருள்கள்'

DIN

ஊரக வளர்ச்சிக்குத் தேவையான 9 முக்கிய கருப்பொருள்களை நிர்ணயித்து தமிழக ஊரக வளர்ச்சித் துறை செயல்பட்டு வருவதாக அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். 

மத்திய அரசின் ஊராட்சி அமைச்சகத்தால் தில்லியில் 
குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு தலைமையில் நடத்தப்பட்ட ’சுதந்திர தின அமுதப் பெருவிழா’  கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்தவகையில், ஊராட்சித் துறை அமைச்சகம் இந்த நிகழ்ச்சியை ஏப்ரல் மாதம் 11 முதல் ஏப்ரல் 17 வரை கொண்டாடி வருகிறது. இதில் நிகழ்ச்சியில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கலந்துகொண்டு உரையாற்றினார்.

இதில், நீடித்த வளர்ச்சி இலக்குகளை ஊராட்சிகள்
அளவில் அமல்படுத்திட, ஒருங்கிணைந்த நீடித்த வளர்ச்சியை எட்டிட
எடுக்கவேண்டிய பல்வேறு நடவடிக்கைகள் குறித்து உரையாற்றினார்.

ஊராட்சித் துறை 9 முக்கிய ஆய்வுக் கருப்பொருட்களை அடிப்படையாக கொண்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகக் கூறினார். 

அவ்வாறு மேற்கொள்ளும் போது மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக தமிழகம் விளங்கும் என்கிற உறுதிமொழியை அளித்தார்கள்.

9 முக்கிய ஆய்வுக் கருப்பொருட்கள்:

நிறைந்த வறுமையற்ற கிராமம் ஏற்படுத்துதல், நோயற்ற ஊராட்சி,
குழந்தைகள் நேய ஊராட்சி, நீர் நிறைந்த ஊராட்சி, பசுமை ஊராட்சி,
அடிப்படை வசதிகள் தன்னிறைவு பெற்ற ஊராட்சி, சமூக பாதுகாப்பு
நிறைந்த ஊராட்சி, சிறந்த ஆளுமை கொண்ட ஊராட்சி மற்றும் பாலின
சமத்துவ ஊராட்சி ஆகிய தலைப்புகளில் பல்வேறு
ஊராட்சிகளில் சிறப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT