திருச்சி மத்திய பேருந்து நிலையம் அரிஸ்டோ ரவுண்டானா அருகே உள்ள அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என். நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 
தமிழ்நாடு

திருச்சியில் அம்பேத்கர் சிலைக்கு அமைச்சர் கே.என்.நேரு மரியாதை

அம்பேத்கரின் 131 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மத்திய பேருந்து நிலையம் அரிஸ்டோ ரவுண்டானா அருகே உள்ள அவரது திருவுருவ சிலைக்கு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என். நேரு மாலை அணிவித்து மரியாதை

DIN

திருச்சி: அம்பேத்கரின் 131 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மத்திய பேருந்து நிலையம் அரிஸ்டோ ரவுண்டானா அருகே உள்ள அவரது திருவுருவ சிலைக்கு திமுக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என். நேரு தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து தில்லை நகரில் உள்ள திமுக மாவட்ட அலுவலகத்தில் அம்பேத்கரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந் நிகழ்ச்சியில், மாநகர மேயர் அன்பழகன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் ந. தியாகராஜன், அ. சௌந்தரபாண்டியன், செ. ஸ்டாலின் குமார், எம். பழனியாண்டி, சீ. கதிரவன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் தர்மன் ராஜேந்திரன், முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமி, மண்டல குழு தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்காதேவி,பகுதி செயலாளர்கள் கண்ணன் காஜாமலை விஜய், மோகன்தாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேறிய இருவர் யார்?

மயிலழகு... பிரனிதா சுபாஷ்!

பராசக்தி படப்பிடிப்பு நிறைவு!

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 4 பேர் பலி, 12 பேர் காயம்

அடுத்த படம் தனுஷுடன்தான்: மாரி செல்வராஜ்

SCROLL FOR NEXT