தமிழ்நாடு

திருநங்கைகள் நாள்: தேநீர் விருந்து அளித்த முதல்வர் ஸ்டாலின்

தேசிய திருநங்கையர் தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் திருநங்கையர்களுக்கு தேநீர் விருந்து அளித்தார். 

DIN

தேசிய திருநங்கையர் தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் திருநங்கையர்களுக்கு தேநீர் விருந்து அளித்தார்.  

திருநங்கைகள் நலவாரிய உறுப்பினர் முனைவர் ரியா, தோழி அமைப்பின் நிர்வாகி சுதா, கேத்ரினா, இயன் முறை மருத்துவர்கள் செல்வி சந்தோசம் மற்றும் மோனிகா ஆகியோர் சென்னை முகாம் அலுவலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது திருநங்கைகளுக்கு தேநீர் விருந்து அளித்தார். 

இந்நிகழ்வின்போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உடனிருந்தார். 

இதுகுறித்து முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில், 

'இன்று என்னைச் சந்தித்த சகோதரி ரியா உள்ளிட்ட திருநங்கை சகோதரிகளுக்கு திருநங்கையர் நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தேன். திருநங்கையர் கண்ணியம் காத்த முத்தமிழறிஞர் கலைஞர் காட்டிய சமூகநீதிப் பாதையில் நடைபோடும் நமது அரசு, திருநங்கையர் - திருநம்பியர் உரிமை காக்க தொடர்ந்து உழைக்கும்!' என்று பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருங்குயில்... திவ்யா துரைசாமி!

மகளிர் உலகக் கோப்பை தோல்வி எதிரொலி! பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!

பிலிப்பின்ஸில் ‘கேல்மெகி புயல்’ கோரத்தாண்டவம்: 26 பேர் உயிரிழப்பு!

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

SCROLL FOR NEXT