தமிழ்நாடு

நரிக்குறவ மாணவி வீட்டில் உணவருந்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை திருமுல்லைவாயல் குடியிருப்புப் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், மாணவி ஒருவரின் வீட்டில் உணவு மற்றும் தேநீர் அருந்தினார். 

DIN

சென்னை திருமுல்லைவாயல் குடியிருப்புப் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், மாணவி ஒருவரின் வீட்டில் உணவு மற்றும் தேநீர் அருந்தினார். 

சென்னை திருமுல்லைவாயில் நரிக்குறவர் காலனியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் நரிக்குறவர் இன மக்களுக்கு குடும்ப அட்டை, மருத்துவக் காப்பீடு அட்டை, முதியோர் உதவித் தொகை என நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

ஏற்கெனவே, விடியோ அழைப்பில், நரிக்குறவ மாணவி ஒருவர் முதல்வரை வீட்டிற்கு அழைத்திருந்தார். முதல்வரும் வருவதாக உறுதி அளித்திருந்தார். 

இதையடுத்து இன்று மாணவி திவ்யாவின் வீட்டிற்கு முதல்வர் சென்று அங்கு உணவு மற்றும் தேநீர் அருந்தினார். முன்னதாக நரிக்குறவ மாணவிகள், அவருக்கு பாசிமாலை அணிவித்தும், பூ கொடுத்தும் வரவேற்றனர். 

இதன் தொடர்ச்சியாக நரிக்குறவ மக்கள் முன்னிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி வருகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நடிகர் ரோபோ சங்கர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

மும்பையில் பிரபல பள்ளியில் 4 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை: பெண் ஊழியர் கைது

போதைப்பொருள் கடத்தல் நாடுகள் பட்டியலில் இந்தியா! டிரம்ப் அறிவிப்பு!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது!

புர்ஜ் கலிஃபாவில் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து!

SCROLL FOR NEXT