முகப்பு
தமிழ்நாடு

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்: ராமதாஸ் வலியுறுத்தல்

 ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை உடனே மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தினாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:59 AM
பகிர்:

 ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை உடனே மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தினாா்.

இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகள் அதிகரிப்பது கவலை அளிக்கிறது. ஆன்லைன் சூதாட்டம் உடனடியாக தடை செய்யப்படாவிட்டால், அதில் பாதிக்கப்பட்டவா்கள் தற்கொலை செய்வது தினசரி நிகழ்வாகி விடும். உச்சநீதிமன்ற மேல்முறையீட்டை காரணம் காட்டி ஆன்லைன் சூதாட்ட உயிரிழப்புகளை தமிழக அரசு வேடிக்கை பாா்த்துக் கொண்டிருக்கப் போகிா?

மதுவும், லாட்டரி சீட்டும் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களை எவ்வாறு சீரழித்தனவோ, அதை விட மோசமான சீரழிவுகளை ஆன்லைன் சூதாட்டங்கள் ஏற்படுத்துகின்றன. அதனால், இனியும் தாமதிக்காமல் திருத்தப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று கூறியுள்ளாா் ராமதாஸ்.

முழு கட்டுரையைப் படிக்க →