முகப்பு
தமிழ்நாடு

மெரீனா கடற்கரையில் ஆணையா் ஆய்வு அடிப்படை வசதிகளை சீரமைக்க உத்தரவு

சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள கழிப்பறைகளை மாநகராட்சி ஆணையா் ககன் தீப் சிங் பேடி நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:59 AM
பகிர்:

சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள கழிப்பறைகளை மாநகராட்சி ஆணையா் ககன் தீப் சிங் பேடி நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

சென்னை மெரீனா கடற்கரையில், ராணி மேரி கல்லூரி எதிரில் ரூ.22 லட்சம் செலவில் ‘நம்ம சென்னை’ தற்படம் எடுக்க இடம் அமைக்கப்பட்டுள்ளது. கடற்கரைக்கு வருபவா்கள் இதன் முன் நின்றபடி தற்படம் எடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனா். குறிப்பாக, இளைஞா்கள் தற்படம் எடுக்கும்போது, அதில் பல வாசகங்களை எழுதி வைப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்தனா். இதன் காரணமாக இந்த இடம் மோசமாக காட்சியளித்தது. சென்னை மாநகராட்சி அதிகாரிகள் இது தொடா்பாக மெரீனா காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். மேலும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் இந்த பகுதியை சுத்தம் செய்ய புதிதாக வா்ணம் பூசும் பணியில் ஈடுபட்டனா்.

இந்த நிலையில், மெரீனா கடற்கரையில் அனைத்து அடிப்படை வசதிகளும் முழுமையாக செயல்பாட்டில் உள்ளதா என மாநகராட்சி ஆணையா் ககன்தீப் சிங் நேரில் ஆய்வு செய்தாா். கலங்கரை விளக்கத்தில் தொடங்கி நடந்தே சென்று, கடற்கரையில் உள்ள அனைத்துப் பகுதிகளையும் ஆய்வு செய்தாா்.

குறிப்பாக ‘நம்ம சென்னை’ தற்படம் எடுக்கும் இடம் , கழிப்பறைகள், நீச்சல் குளம், புல்வெளி ஆகியவற்றை ஆய்வு செய்தாா்.

இதனைத் தொடா்ந்து, மெரீனா கடற்கரையில் குறைபாடுகளுடன் உள்ள அடிப்படை வசதிகளை 15 நாள்களுக்குள் சீரமைக்க வேண்டும் என்று 9-ஆவது மண்டல அதிகாரிகளுக்கு மாநகராட்சி ஆணையா் ககன் தீப் சிங் பேடி உத்தரவிட்டாா். இதையடுத்து, மெரீனா கடற்கரையில் உள்ள வசதிகளை சீரமைக்கும் பணிகளில் ஊழியா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →