தமிழ்நாடு

உத்தமபாளையம் அருகே போலீஸ் ஜீப் மோதி நர்சிங் மாணவி பலி: உறவினர்கள் சாலை மறியல்

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே அனுமந்தன்பட்டியில் போலீஸ் ஜீப் மோதி நர்சிங் கல்லூரி மாணவி சம்பவ இடத்திலேயே பலியானார்.

DIN

உத்தமபாளையம்: தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே அனுமந்தன்பட்டியில் போலீஸ் ஜீப் மோதி நர்சிங் கல்லூரி மாணவி சம்பவ இடத்திலேயே பலியானார்.

அனுமந்தன் பட்டியைச்  சேர்ந்த ஆண்டிச்சாமி- ஈஸ்வரி தம்பதியின் மகள் அஜிதா(16). இவர் மதுரையில் தனியார் நர்சிங் கல்லூரியில் 4 ஆண்டு நர்சிங் படித்து வருகிறார். 

இந்நிலையில், இன்று திங்கள்கிழமை காலை கல்லூரி செல்வதற்காக அனுமந்தன்பட்டி பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த போலீஸ் ஜீப் பேருந்துக்காக காத்திருந்த 4 பேர் மீது மோதியது. இதில் அஜிதா சம்பவ இடத்திலேயே பலியானார். தாய், தந்தை மற்றும் உறவினர் உள்பட 3 பேரும் படுகாயம் அடைந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து உறவினர்கள் காவல்துறைக்கு சொந்தமான ஜீப் மோதியதால் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அனுமந்தன்பட்டி திண்டுக்கல் குமுளி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்துக்கு சென்ற உத்தமபாளையம் போலீசார் காவல் துறைக்கு சொந்தமான ஜீப் பழுது பார்க்க விடப்பட்டது. இதனை அடுத்து அந்த வாகனத்தை இயக்கியவர் மெக்கானிக் எனவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நடிகர் மதன் பாப் உடல் தகனம்

“Button Phone போதும்!” எனக்கு போனில் பேசப் பிடிக்காது! கேப்டன் எம்.எஸ்.தோனி

தமிழகத்தில் 5 நாள்களுக்கு கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்?

ருதுராஜ் வருகிறார், மினி ஏலத்தில் ஓட்டைகளை அடைப்போம்: எம்.எஸ்.தோனி

கோவை வந்த தோனிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

SCROLL FOR NEXT