தமிழ்நாடு

உலக பாரம்பரிய நாள்: மாமல்லபுரத்தில் இன்று அனுமதி இலவசம்!

DIN

உலக பாரம்பரிய நாளையொட்டி, செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களைக் காண அனுமதி இலவசம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

பாரம்பரிய, கலாசார சின்னங்களை பாதுகாக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 18 ஆம் தேதி உலக பாரம்பரிய நாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்றைய தினம், செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச அனுமதி வழங்கப்படுகிறது. 

மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், ஐந்து ரதம், அர்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டை பாறை உள்ளிட்ட புராதன சின்னங்களை இலவசமாகச் சென்று பார்க்கலாம் என்று தொல்லியல் துறை அறிவித்துள்ளது. மாலை 6 மணி வரை இங்கு அனுமதி வழங்கப்படுகிறது. 

மேலும் மாமல்லபுரத்தில் இன்று சுற்றுலாத் துறை மற்றும் தொல்லியல் துறை சார்பில் விழாக்களும் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்வியைப் போல தன்னம்பிகை தருவது வேறு எதுவுமில்லை: வெ.இறையன்பு

தொழுநோயாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்

கிடப்பில் விடியல் திட்டம் மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளா்கள் அவதி

வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி

வில்வித்தை உலகக் கோப்பை: இந்தியாவுக்கு 4 தங்கம் ஜோதி சுரேகாவுக்கு ஹாட்ரிக் தங்கம்

SCROLL FOR NEXT