கொழுந்துவிட்டு எரியும் தென்னை நார் தொழிற்சாலை 
தமிழ்நாடு

கிருஷ்ணகிரி அருகே தென்னை நார் தொழிற்சாலை தீ: ஆலை முற்றிலும் எரிந்து நாசம்

கிருஷ்ணகிரி அருகே தென்னை நார் தொழிற்சாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் ஆலை முற்றிலும் எரிந்து நாசமாயின.

DIN


கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அருகே தென்னை நார் தொழிற்சாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் ஆலை முற்றிலும் எரிந்து நாசமாயின.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பகுதியைச் சேர்ந்தவர் மாதையன் (45). இவருக்கு, கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணம் அருகே உள்ள பண்ணிஅள்ளியை அடுத்த பெரம்மன் கொட்டாய் என்ற கிராமத்தில் தென்னை நார் தொழிற்சாலை உள்ளது.

இங்கு பணியாற்றும் தொழிலாளர்கள், செவ்வாய்க்கிழமை இரவு 10 மணியளவில் தொழிற்சாலையின் வெளியே உணவருந்திக் கொண்டிருந்த போது தொழிற்சாலையிலிருந்து புகை வருவதைக் கண்டனர்.  உடனே, புகையை கட்டுப்படுத்த முயன்றனர். மேலும்,  இதுகுறித்து கிருஷ்ணகிரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு வீரர்கள்.

இந்த நிலையில், தீயானது மற்ற பகுதிகளில் வேகமாக பரவத் தொடங்கியது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். 

மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகவும், இந்த விபத்தில் தொழிற்சாலை முற்றிலும் சேதம் அடைந்ததாகவும் அவற்றின் மதிப்பு ரூ.20 லட்சம் என தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை

இந்நாள், முன்னாள் அமைச்சா்கள் மீதான வழக்குகள் கைவிடப்படவில்லை: தமிழக அரசின் பிரமாணப் பத்திரத்தில் தகவல்

திருமலை ஏழுமலையான் பிரம்மோற்சவ ஏற்பாடுகள் தீவிரம்

நாளை விவசாயிகள் குறைதீா் கூட்டம்

வழக்குரைஞா்கள் பணிப் புறக்கணிப்பு, மறியல்

SCROLL FOR NEXT