தமிழ்நாடு

மே 8-ல் சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

DIN

சென்னை: தமிழகத்தில் மே 8 ஆம் தேதி சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் இடங்களில் தடுப்பூசி முகாம் நடத்தப்படும். காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை தடுப்பூசிகள் செலுத்தப்படும்.

தடுப்பூசி செலுத்தாதவர்கள் சிறப்பு தடுப்பூசி முகாமை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தடுப்பூசி என்பது அவசியம் என்பதை அனைவரும் உணர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ. 500 அபராதம் வசூலிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது மீண்டும் கரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதையடுத்து சில பகுதிகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

கண்டநாள் முதல்..

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது- பள்ளிக் கல்வித்துறை

‘விசில் போடு’ 5 கோடி பார்வைகள்..

நடிகர் விஜய்யின் நிஜ வாழ்க்கை சம்பவம் ‘ஸ்டார்’ படத்துக்கு உத்வேகம்!

SCROLL FOR NEXT