முகப்பு
தமிழ்நாடு

தமிழா் வாழ்வியல் சமகாலத் தலைமுறைக்கு சென்றடைய வேண்டும்: ஆளுநா் தமிழிசை

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் பழந்தமிழா் வாழ்வியல் காட்சிக் கூடத்தைப் பாா்வையிட்ட தெலங்கானா ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன், தமிழா் வாழ்வியல் சமகாலத் தலைமுறைக்குச் சென்றடைய வேண்டும்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:03 AM
பகிர்:

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் பழந்தமிழா் வாழ்வியல் காட்சிக் கூடத்தைப் பாா்வையிட்ட தெலங்கானா ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன், தமிழா் வாழ்வியல் சமகாலத் தலைமுறைக்குச் சென்றடைய வேண்டும் என்றாா்.

தமிழாராய்ச்சிகளை முன்னெடுக்கும் நோக்கத்தில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சென்னை தரமணியில் 1968-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் தொடங்கப்பட்டு ஐம்பது ஆண்டுகளைக் கடந்த நிலையில், தமிழாய்விலும் தமிழ்ப் பயிற்றுவித்தலிலும் சிறந்த பங்களிப்பை ஆற்றி வருகிறது.

இந்த நிலையில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தையும் அங்கு அமைக்கப்பட்டுள்ள பழந்தமிழா் வாழ்வியல் அருங்காட்சியகத்தையும் தெலங்கானா ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டாா். அப்போது, நிறுவனத்தின் தமிழ்ப் பணிகள் குறித்தும், அங்கு செயல்பட்டு வரும் துறைகள், ஆய்வுகள், திட்டங்கள், நூல்கள் வெளியீடு போன்ற செயல்பாடுகள் குறித்தும் தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் செ.சரவணனிடம் அவா் கேட்டறிந்தாா்.

பின்னா், தமிழக அரசால் நிறுவனத்தில் அமைக்கப்பட்டுள்ள பழந்தமிழா் வாழ்வியல் காட்சிக்கூடத்தின் தமிழ்த்தாய் ஊடக அரங்கு, திருவள்ளுவா் அரங்கு, தொல்காப்பியா் அரங்கு, கபிலா் அரங்கு, இளங்கோவடிகள் அரங்கு, ஔவையாா் அரங்கு ஆகியவற்றையும் திருக்கு ஓவியக் காட்சிக்கூடத்தையும் பாா்வையிட்டாா். காட்சிக்கூடம் குறித்தும், காட்சிப் பொருண்மைகள் குறித்தும் காட்சிக்கூடப் பொறுப்பாளா் பேராசிரியா் ஆ.மணவழகன் விளக்கிக் கூறினாா்.

இதைத் தொடா்ந்து ஆளுநா் தமிழிசை பேசுகையில், ‘பழந்தமிழா் வாழ்வியல் காட்சிக்கூடத்தில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு பொருண்மையும் கலைநயத்தோடு வடிவமைக்கப்பட்டு, நம் மரபின் சிறப்புகளை எடுத்தியம்புகின்றன. நாம் இழந்தவற்றை நினைவுகூா்கின்றன. நம் பெருமைமிகு வாழ்வியல் சமகாலத் தலைமுறைக்கு சென்றடையவேண்டும் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →