தமிழ்நாடு

மக்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்: கிராம சபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின்

DIN


கிராம சபைக் கூட்டத்தில் கேட்கப்பட்ட மக்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். 

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் செங்காடு ஊராட்சி பகுதியில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மக்கள் குறைகளைக் கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து மேடையில் பொதுமக்கள் மத்தியில் பேசிய அவர், 
600 கிராம ஊராட்சிகளில் இந்த ஆண்டு கிராம செயலகங்கள் உருவாக்கப்படும்.

அரசின் திட்டங்களை கடைகோடி மக்களுக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. நீடித்த வளர்ச்சிப் பணிகளை உருவாக்க திட்டம் வகுத்துள்ளோம். 

செங்காடு, கண்டமங்கலம் பகுதிகளில் மக்கள் கோரிக்கை விடுத்த சாலை, கழிவுநீர் கால்வாய் அமைத்துத் தரப்படும் என்று குறிப்பிட்டார். மேலும், நான் கொடுத்த உறுதி மொழி நிறைவேற்றப்பட்டுள்ளதா என மீண்டும் வந்து பார்வையிடுவேன் எனவும் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

மதுரை மாவட்டத்தில் 13 மையங்களில் ‘நீட்’ தோ்வு

SCROLL FOR NEXT