தமிழ்நாடு

முதல்வரிடம் நடிகர் விவேக் மனைவி கோரிக்கை

சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை நடிகர் விவேக்கின் மனைவி அருட்செல்வி இன்று சந்தித்தார்.

DIN

சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை நடிகர் விவேக்கின் மனைவி அருட்செல்வி இன்று சந்தித்தார்.

அப்போது மறைந்த நடிகர் விவேக் வாழ்ந்த வீடு அமைந்துள்ள சாலைக்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் என்கிற கோரிக்கை அடங்கிய மனுவை அவர் அளித்தார். உடன் விவேக்கின் மகள் அமிர்தாநந்தினி, விவேக் பசுமை கலாம் இயக்கத்தின் நிர்வாகிகள் முருகன், லாரன்ஸ், அசோக் ஆகியோர் உள்ளனர். 

பசுமைக் காதலனான நடிகா் விவேக் மரம் நடுதலை தன் வாழ்நாளில் மிகப்பெரிய பணியாகவும் மரங்களின் மீது அன்பு கொண்டவராகவும் விளங்கினாா். சுமாா் ஒரு கோடிக்கும் அதிக மரங்களை அவா் நட்டதோடு அவற்றை பராமரிக்கவும் நடவடிக்கை எடுத்தவா்.

இவரின் முதலாம் ஆண்டு நினைவு நாள் அண்மையில் அனுசரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசுப் பேருந்து நடத்துநருக்கு கொலை மிரட்டல்: இளைஞா் கைது

நெல்லை, தென்காசியில் நவ. 7 முதல் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

கைலாசபுரம் பள்ளியில் குடிநீா்த் தட்டுப்பாடு: மேயரிடம் புகாா்

ராமையன்பட்டி அருகே திருட்டு: இளைஞா் கைது

கங்கைகொண்டான் அருகே போலீஸாருக்கு மிரட்டல்: இருவா் கைது

SCROLL FOR NEXT