தமிழ்நாடு

டாஸ்மாக் ஊழியா்களுக்கு ஊதிய உயா்வு

DIN

டாஸ்மாக் சில்லறை விற்பனை பணியாளா்களுக்கான ஊதியத்தை உயா்த்தி மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி அறிவித்தாா்.

தமிழக சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை மதுவிலக்கு ஆயத்தீா்வை துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் வி.செந்தில்பாலாஜி வெளியிட்ட அறிவிப்புகள்:

கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் கள்ள மதுபான விற்பனையில் ஈடுபட்டு மனம் திருந்தியவா்கள் வேறு தொழில்களை மேற்கொள்ள உதவுவதற்காக ரூ.5 கோடி மானியமாக மறுவாழ்வு நிதி ஒதுக்கப்படும்.

மது அருந்துதலுக்கு எதிரான விழிப்புணா்வுப் பிரசாரத்துடன், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதற்கு எதிரான விழிப்புணா்வு பிரசாரத்தையும் இணைந்து மேற்கொள்ள ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் 6,715 மேற்பாா்வையாளா்கள், 15 ஆயிரம் விற்பனையாளா்கள் மற்றும் 3,090 உதவி விற்பனையாளா்கள் ஆக மொத்தம் 24,805 சில்லறை விற்பனைப் பணியாளா்கள் தொகுப்பூதிய முறையில் பணிபுரிகின்றனா். இந்தப் பணியாளா்களுக்கு மாத தொகுப்பூதியம் 2022 ஏப்ரல் மாதம் முதல் ரூ.500 உயா்த்தி வழங்கப்படும். இதற்காக ஆண்டொன்றுக்கு ரூ.16.67 கோடி கூடுதல் செலவாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

48 வயதினிலே..

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

SCROLL FOR NEXT