தமிழ்நாடு

1 முதல் 9 வகுப்புகளுக்கு இறுதித் தேர்வு கட்டாயம்: தமிழக பள்ளிக்கல்வித் துறை

தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை கட்டாயமாக இறுதித் தேர்வு நடைபெறும் என பள்ளிக் கல்வித் துறை விளக்கம் தெரிவித்துள்ளது. 

DIN

தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை கட்டாயமாக இறுதித் தேர்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித் துறை விளக்கம் தெரிவித்துள்ளது. 

புதுச்சேரியில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை தேர்வின்றி அனைவரும் தேர்ச்சி என்று நேற்று அறிவிக்கப்ப்பட்டது. இதையடுத்து தமிழகத்திலும் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என்று தகவல்கள் பரவின. 

இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள பள்ளிக்கல்வித் துறை, 'தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை கட்டாயமாக இறுதித் தேர்வு நடைபெறும். திட்டமிட்டபடி மே 6 முதல் 13 ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும். 

குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி தேர்வுத்தாள் தயாரிக்கப்படும். எனவே, தேர்வின்றி அனைவரும் தேர்ச்சி என்ற வதந்திகளை நம்ப வேண்டாம்' என்று தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடிபோதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பாளையங்கோட்டையில் பரபரப்பு!

ரஷியாவிடமிருந்து இனி இந்தியா கச்சா எண்ணெய் வாங்கப்போவதில்லையாம்: டிரம்ப் தகவல்

வெண்ணிலவே... ரேஷ்மா பசுபுலேட்டி!

ரெட் ரோஸ்... சாக்‌ஷி அகர்வால்!

இனி நோயாளிகள் இல்லை, மருத்துவப் பயனாளிகள்: மு.க. ஸ்டாலின்

SCROLL FOR NEXT