தமிழ்நாடு

நிலக்கரி வருகை: தூத்துக்குடியில் மேலும் 2 அலகுகளில் மின் உற்பத்தி

நிலக்கரி வந்ததையடுத்து தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மேலும் 2 அலகுகளில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது.

DIN

நிலக்கரி வந்ததையடுத்து தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மேலும் 2 அலகுகளில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது.

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட 5 அலகுகள் உள்ளன. இதன் மூலம் நாள்தோறும் 1,050 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சமீபமாக நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக இங்கு மின் உற்பத்தி அடிக்கடி பாதிக்கப்பட்டு வருகிறது. 

போதிய நிலக்கரி இல்லாததால் நேற்று முதல் அலகில் மட்டும் மின் உற்பத்தி நடைபெற்றது. இதனால் 840 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. 

இந்நிலையில் இன்று 29,000 டன் நிலக்கரி வந்ததையடுத்து, மேலும் 2 அலகுகளில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. தற்போது 1,2,3 ஆகிய மூன்று அலகுகளில் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விவசாயிகள் நலனில் சமரசம்! நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

ஊர்க்காவலன் (பாகம்-2)

எப்ஸ்டீன் கோப்புகள்! ரஷிய பெண்ணுடன் உறவு; பில்கேட்ஸுக்கு பால்வினை நோய்?

விசில்

நிலம், நீர், நிழல்: தமிழ் இலக்கியங்களில் சூழலியல்

SCROLL FOR NEXT