தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி பள்ளி வன்முறை: 5 பேருக்கு ஒருநாள் சிறப்பு புலனாய்வு குழு காவல்

கனியாமூர் வன்முறை தொடர்பாக கைதான மக்கள் அதிகாரம் ராமலிங்கம், தபெதிக பிரபு உள்பட 5 பேரை ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவினருக்கு கள்ளக்குறிச்சி நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. 

DIN

கனியாமூர் வன்முறை தொடர்பாக கைதான மக்கள் அதிகாரம் ராமலிங்கம், தபெதிக பிரபு உள்பட 5 பேரை ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவினருக்கு கள்ளக்குறிச்சி நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. 

கடலூா் மாவட்டம், பெரியநெசலூா் கிராமத்தைச் சோ்ந்த ராமலிங்கம் மகள் ஸ்ரீமதி (17). இவா், கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் உள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த நிலையில், அந்தப் பள்ளி வளாகத்தில் கடந்த 13-ஆம் தேதி மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்தாா். 

மாணவி மரணத்தை கண்டித்து நடந்த போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டு பள்ளி வாகனங்கள் உள்ளிட்டவை எரிக்கப்பட்டன. இதையடுத்து வன்முறையில் ஈடுபட்டதாக மக்கள் அதிகாரம் அமைப்பு, பெரியார் திராவிட கழக நிர்வாகிகள் உள்பட 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில் வன்முறை தொடர்பாக கைதான மக்கள் அதிகாரம் ராமலிங்கம், தபெதிக பிரபு உள்பட 5 பேரை ஒருநாள் காவலில் விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவினருக்கு கள்ளக்குறிச்சி நீதிமன்றம் இன்று அனுமதியளித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

என் மேல் ஒளிரும் சூரியன்... பூஜிதா பொன்னாடா!

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

SCROLL FOR NEXT