தமிழ்நாடு

ஆக. 7ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு நாளையொட்டி வருகிற ஆகஸ்ட் 7 ஆம் தேதி சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற உள்ளது. 

DIN

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு நாளையொட்டி வருகிற ஆகஸ்ட் 7 ஆம் தேதி சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற உள்ளது. 

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 4 ஆவது ஆண்டு நினைவு நாள் வருகிற ஆகஸ்ட் 7 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி திமுக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

அதன் ஒரு பகுதியாக, ஆகஸ்ட் 7 ஆம் தேதி காலை 8.30 மணிக்கு சென்னை அண்ணா சாலை, ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள கருணாநிதி சிலை அருகிலிருந்து புறப்பட்டு, காமராஜர் சாலையில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடம் வரை பேரணி நடைபெறுகிறது. பேரணியின் நிறைவில் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்படுகிறது. 

இதில் திமுகவைச் சேர்ந்த அனைத்து நிர்வாகிகளும் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரிசியும் சர்க்கரையும் ஏற்றிவந்த கப்பலில் தீ விபத்து!

தில்லி புறப்பட்டார் நயினார் நாகேந்திரன்! காரணம் என்ன?

இது வெறும் ஆரம்பம் மட்டுமே.... அபிஷேக் சர்மாவுக்கு அஸ்வின் பாராட்டு!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் சரிந்து ரூ.88.31ஆக நிறைவு!

ரிஷப் ஷெட்டிக்கு தமிழ் டப்பிங் செய்த பிரபல நடிகர்!

SCROLL FOR NEXT