தமிழ்நாடு

கொடநாடு வழக்கு:  மருது அழகுராஜிடம் நடத்தப்பட்ட விசாரணை நிறைவு

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக மறுத்து அழகுராஜிடம் 5 மணி நேரமாக நடந்த விசாரணை நிறைவு பெற்றது. 

DIN

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக மறுத்து அழகுராஜிடம் 5 மணி நேரமாக நடந்த விசாரணை நிறைவு பெற்றது. 

வழக்கு விசாரணை 5 ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில், தனிப்படை அழைப்பாணையை ஏற்று விசாரணைக்கு ஆஜரானார் மருது அழகுராஜ்.  இந்த விசாரணையை தீவிரப்படுத்துவதற்காக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக நமது அம்மா நாளிதழ் முன்னாள் ஆசிரியர் மருது அழகுராஜிடம் காவல்துறையினர் இன்று விசாரணை நடத்தினர்.

கோத்தகிரி அருகேயுள்ள, கொடநாடு எஸ்டேட்டில் 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி கொள்ளை முயற்சி நடைபெற்றது. இதில், எஸ்டேட்டின் காவலாளியான ஓம் பகதூா் கொலை செய்யப்பட்டாா். இச்சம்பவம் தொடா்பாக சயான், வாளையாறு மனோஜ், சந்தோஷ் சாமி, தீபு, சதீசன், உதயகுமாா், ஜிதின் ஜாய், ஜம்சீா் அலி, மனோஜ் சாமி, குட்டி (எ) பிஜின் ஆகியோரை கோத்தகிரி போலீஸாா் கைது செய்தனா். மேலும், இவ்வழக்கில் தொடா்புடைய காா் ஓட்டுநா் கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தாா்.

இச்சம்பவம் குறித்து நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 5 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வருகிறது.

மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகா், கோவை சரக டி.ஐ.ஜி. முத்துசாமி ஆகியோரது நேரடி மேற்பாா்வையில் 5 தனிப் படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் இதுவரை 267 சாட்சிகளிடம் விசாரணை முடிந்துள்ளது.

இந்நிலையில், கொடநாடு கொலை கொள்ளை வழக்கை விசாரிக்கும் தனிப்படையின் அழைப்பாணையை ஏற்று, இன்று காலை கோவையில் விசாரணைக்கு ஆஜரானார் மருது அழகுராஜ். 

அதிமுகவில் ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே கருத்து மோதல் வந்த நிலையில், நமது அம்மா நாளிதழ் ஆசிரியர் பதவியிலிருந்து மருது அழகுராஜ் விலகியது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெள்ளை ரோஜா... நேஹா ஷெட்டி!

ஜெய்ஸ்வால், ஆகாஷ் தீப் அரைசதம்; இந்தியா 166 ரன்கள் முன்னிலை!

4 சுங்கச் சாவடிகள்: 50% கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு! - நீதிமன்றத்தில் தகவல்

ஐஐடி மும்பையில் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

நான் துரோகம் செய்யவில்லை, தற்கொலைக்கு முயன்றேன்..! விவாகரத்து பற்றி சஹால்!

SCROLL FOR NEXT