கோப்புப் படம் 
தமிழ்நாடு

மக்கள் தொடர்பு அலுவலர் தேர்வில் மாற்றம்: அரசாணை

தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையில் உள்ள உதவி மக்கள் தொடர்பு அலுவலர் தேர்வில் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

DIN

தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையில் உள்ள உதவி மக்கள் தொடர்பு அலுவலர் தேர்வில் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,   உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் இதுவரை நேரடியாக நியமித்த நிலையில் இனி டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்படும்.

உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணியில் சேருவோர் ஏதாவது ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்ற தகுதி நீக்கப்பட்டு, இதழியல் படிப்பு படித்திருப்பதும் கட்டாயம் என மாற்றப்பட்டுள்ளது. 

மேலும், 2 ஆண்டுகள் மக்கள் தொடர்பு அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்ற விதியும் நீக்கப்பட்டுள்ளது.

உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கு அவ்வபோது தற்காலிக விதிகளில் திருத்தங்கள் செய்யப்படும். அந்தவகையில்,  நேரடி நியமனம், பணிமாறுதல் மற்றும் பதவி உயர்வின் மூலம் நியமனம் செய்யப்பட வேண்டும்.

அதாவது 1:1 என்ற விகிதத்தில் (50% நேரடி நியமனம், 50% பதவி உயர்வு, பணிமாறுதல் நியமனம்) நிரப்ப வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்படுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவள்ளூரில் பரவலாக மழை

தேனீக்கள் கொட்டியதில் 20-க்கும் மேற்பட்டோா் காயம்

’வன்னியா் சங்க கட்டடம் இப்போதுள்ள நிலையே தொடரலாம்’: உச்சநீதிமன்றம் உத்தரவு

பூட்டிய வீட்டில் நகைகள், வெள்ளிப் பொருள்கள் திருட்டு

அரசுப் பேருந்து சேதம்: இளைஞா் கைது

SCROLL FOR NEXT